உதயாவின் வலைவனம்

என் மனப்பூக்களின் வாசனைகளை சேமிக்க இந்த வலைப்பூ!

23.8.06

படித்தீர்களா இதையாரும்!

ஒரு குட்டிப்பாப்பாவிடம் தொலைபேசி வழியாக ஒரு தொலைகாட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளரால் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம்:
"ஐந்து இனிப்புகளை ஆறு பேருக்கு எப்படி பங்கிட்டு கொடுப்பது?"
சிறுமி சொல்லியிருக்கிறாள்....ஒருவரைக் கொன்றுவிட்டு ஐந்து பேருக்கு ஆளுக்கொன்று தரலாம் என்று.
அதிர்ந்துதான் போய்விட்டேன் படித்தவுடன்.
இதை அறிவின் வளர்ச்சியென்பதா.....
மரணங்களையும், பிணங்களையும் காட்சிப்பெட்டியில் தினம் தினம் கண்டதனால் வந்த பக்குவம் என்பதா!
வேதனையாய் இருக்கிறது
இந்த பிஞ்சு மனங்களில் அப்பியிருக்கும் கொடூரத்தையும் இரக்கமற்ற இயல்பையும் துடைதெறிவது எப்படி.
திக்கென்று பயமாகக்கூட இருக்கிறது.
எதிர்கால சந்ததி எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?

Labels:

1 Comments:

  • At 11/19/2006 2:00 AM , Blogger மாசிலா said...

    அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
    நீங்கள் கூறியிருப்பதுபோல் ஊடகங்களின் தாக்கமே இது. விளம்பர, பண வெறி பிடித்த ஊடகத்தினர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. நாம்தான் நம் குழந்தைகளை சரி வர பாதுகாத்து வளர்க்க வேண்டும்.
    வருங்கால உலகம் எப்படி இருக்குமோ? நினைத்தாலே பயமாக இருக்கிறது.

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது