உதயாவின் வலைவனம்

என் மனப்பூக்களின் வாசனைகளை சேமிக்க இந்த வலைப்பூ!

6.9.06

'இருப்பி'ற்கான போராட்டம்

காலையில்
படிக்க இருக்கட்டுமென்று
பக்கமாய் நகர்த்திப் போட்ட
காலி மேசைமேல்
மாலைக்குள்
இடம்பிடித்திருந்தன
மடித்த துணிகள்
அன்றைய தினசரி
எழுதுமை புட்டி
அமிர்தாஞ்சன் குப்பி
உதிர்ந்த பூக்கள்
தபால் உறை
நூலிழை அறுந்த மின்விளக்கு
திருப்புளி
கிறுக்கிய தாள்கள்
இசைப்பெட்டி
இஸ்திரிப் பெட்டி......
எனைப் பார்த்து முறைத்தபடி

3 Comments:

  • At 11/19/2006 1:30 AM , Blogger மாசிலா said...

    பொருட்கள் நம்மை ஆக்கிரமித்துக்கொண்ட இந்த நவீண(?) உலகில் மனிதனுக்கே இடமில்லை எனும்போது, பொருட்கள் எங்கு செல்லும்?

    கவிதை நன்று.

     
  • At 11/19/2006 2:04 AM , Blogger thiru said...

    உதயா,

    பொருள்கள் சார்ந்த வாழ்வை உரைக்கும் இனிய கவிதை!

    -comment moderation செய்யுங்கள்

     
  • At 5/22/2007 8:33 PM , Blogger மா சிவகுமார் said...

    வாவ்,

    பொருட்களோ, எண்ணங்களோ வெற்றிடத்தை நிரப்புவதில்தான் எத்தனைப் போட்டி! மிகவும் ரசித்த வரிகள்.

    அன்புடன்,

    மா சிவகுமார்

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது