உதயாவின் வலைவனம்

என் மனப்பூக்களின் வாசனைகளை சேமிக்க இந்த வலைப்பூ!

4.9.06

இதைச் சொல்லியே ஆகவேண்டும்

மகனுக்குத் தெரிந்த பையன்; தினேஷ் குமார் என்று பேர்; +2 மாணவன்; கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கிறான். பெற்றோர் திட்டியதால் நான்கு நாட்களுக்கு முன் வீட்டில் தனியாயிருக்கும் போது தற்கொலை செய்து கொண்டான்.
இப்படி ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அருகில் தெரிந்தவர்களுக்கு நேரும்போது பாதிப்பின் வீச்சு நம்மை அதிகமாய்தான் தாக்குகிறது. இதில் குற்றவாளி என்று யாரைத் தீர்ப்பிடுவது.
ஜெயந்தி எழுதிய 'பந்தயக்குதிரைகள்' கதையில் சொல்லப்படுவது மாதிரி............வாழ்க்கை என்பது பந்தயம் மட்டுமே! அதில் ஜெயிப்பதற்கான ஓட்டம் ஒன்றே இவர்களின் முழுமுதல் சிந்தனை.............என்பதான இந்த பெற்றோர், ஆசிரியர்களின் மனப்பாங்கு அதிர்சியாகத்தான் இருக்கிறது.
சில பள்ளிகளில் இந்த பத்தாவது, +2 பயிலும் மாணவர்களை இவர்கள் நடத்தும் விதம்..... இவர்கள் மனிதப் பிறவிகளா அல்லது நிரலி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கணிணிகளா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!
பேரசைபிடித்த இவர்களின் தீவிரத்தால்தான் உணர்வுகளும், சுதந்திரமும், இயற்கை சார்ந்த ஈடுபாடும், உறவுகளும் நிறைந்த மனிதகுலத்தின் அடுத்த பரிணாமம் சத்தமிலாமல் மெள்ள பிறந்து கொண்டிருக்கிறதோ என்ற உணர்வு மனதை சோகமாக்குகிறது.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது